சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் சந்தானம் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தை தொடந்து தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”டிக்கிலோனா” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் அடுத்தாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இவர் அடுத்ததாக,”ஏஜென்ட் கண்ணாயிரம்” என்ற படத்தில் நடிக்கிறார். மனோஜ் பிதா இயக்கும் இந்த படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது, இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Here is the First Look of #AgentKannayiram
Happy to see @iamsanthanam sir in @manojbeedha_dir’s direction, I really enjoyed #vanjagarulagam and now I'm curious to watch this combo soon 🙌Best wishes to @thisisysr @Labrynth_Films and the whole team 👏🏻 pic.twitter.com/jc15Lxc6X2
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 15, 2021