சந்தானம் பட நடிகை குடும்பத்துடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதில் திரை பிரபலங்களும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர்.குறிப்பாக நடிகர் ஆமிர்கான், மாதவன் உள்ளிட்டோர் கொரனோ தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மற்றொரு பிரபல நடிகைக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் யார் என்றால், பிரபல முன்னணி நடிகர் சந்தானத்துடன் சக்க போடு போடு ராஜா மற்றும் சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் நடித்த நடிகை வைபவி ஷாண்டில்யாவுக்கு தான் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறியதாவது, எனக்கும் என் தாய், தந்தையருக்கும் கொரனொ தொற்று ஏற்பட்டுள்ளது. நான் வசிக்கும் மும்பை பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆகையால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.