இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் சந்தானத்திற்கு பிறந்தநாள் பரிசாக அவர் நடித்துள்ள சபாபதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.
திரையுலகில் காமெடி நாயகனாக வலம் வந்த சந்தானம் தற்போது திரைப்படங்களில் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். “ஒரு கல் ஒரு கண்ணாடி”, “என்றென்றும் புன்னகை”, ஆம்பள” போன்ற படங்களிலிருந்து சந்தானத்திற்கேன்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. பின்னர் சந்தானம் “தில்லுக்கு துட்டு” ,” சக்க போடுபோடு ராஜா”, “பிஸ்க்கோத்” போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார் .
மேலும் அவர் நடிக்கும் அனைத்து படங்களும் நகைச்சுவையை மையமாக கொண்டே எடுக்கப்பட்டது. தற்போது கானா பாடகராக சந்தானம் நடிக்கும் “பாரிஸ் ஜெயராஜ்” படம் முடிவடையும் நிலையில் உள்ளது. மேலும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை நடைபெற்றது. இதற்கிடையே சந்தானம் “சபாபதி” என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த படத்தை ஸ்ரீனிவாச ராவ் இயக்குகிறார். மேலும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் என்பவர் இசையமைக்கிறார். இன்று சந்தானத்திற்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு பரிசளிக்கும் விதமாக “சபாபதி” படத்தின் முதல் பார்வையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.