Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சந்தேகப்படும்படி நின்ற வாலிபர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சுப்பிரமணியபுரம் பேருந்து நிறுத்தத்தில் ஒருவர் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தார். இதனையடுத்து அந்த நபர் காவல்துறையினரை கண்டதும் தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் அவர் தூத்துக்குடி ஆரோக்கியபுரம் ஐயர் விலையை சேர்ந்த செல்வராஜ் மகன் சங்கரசேகர் என்பதும், இவர்  அந்தப் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலையை விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்ததோடு அவரிடம் இருந்த 250 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |