தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று 2 வது நாளாக கூடுகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதல் நாளில் நடந்த அலுவல் ஆய்வு குழு தொடர்பான அறிவிப்பில் எதிர்க்கட்சி துணை தலைவர் என்ற இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெற்றிருந்தது. இதனால் அதிமுகவின் இருக்கைகளில் மாற்றமில்லை என்று தெரியவந்தது. இந்த முடிவால் முதல் நாள் கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு புறக்கணித்தது. இந்நிலையில் 2 வது நாளான இன்று சபாநாயகர் உரிய முடிவெடுத்த அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை பொருத்தை அடுத்த மூன்று நாட்கள் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் முடிவுகள் எடுப்பார் என்று கூறப்படுகிறது.
இந்த சூழலில் இன்று காலை கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக சபாநாயகர் அப்பாவும் அவர்களை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்து பேசினார். அப்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் ஆர்.வி. உதயகுமாரை அமர வாய்ப்பு அளிக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை ஏற்க வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு, அவை தொடங்கியதும் இது பற்றி அறிவிக்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமியிடம் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், சபாநாயகர் அவர்கள் எந்த ஒரு முடிவெடுத்தால் அதை நான் முழு மனதோடு ஏற்றுக்கொள்கிறேன் என்று பதில் அளித்துள்ளார். இதனால் இன்றைய தினம் சட்டப்பேரவை கூட்டத்தில் கடும் வாக்குவாதம் மற்றும் அமளி ஏற்பட போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கூட்டம் தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர்கள் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து சபாநாயகருடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.