சப்போட்டா மில்க் ஷேக்
தேவையான பொருட்கள் :
சப்போட்டா – 2
பால் – 1 கப்
பாதாம்பருப்பு – 5
சர்க்கரை – தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் சப்போட்டா பழங்களை விதை நீக்கிக் கொள்ள வேண்டும் . இதனுடன் பால், சர்க்கரை மற்றும் பாதாம் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் . பின்னர் குளிர வைத்து பரிமாறினால் சுவையான சப்போட்டா மில்க் ஷேக் தயார் !!!