உலக அளவில் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியுள்ளது. இதற்கான தடுப்பு மருந்து தற்போது கண்டறியப்படாத சூழலில், CDC ஆராய்ச்சியாளர்கள் சப்பரே வைரஸ் குறித்து ஆய்வு செய்து வந்த நிலையில், பொலிவியாவில் கண்டறியப்பட்ட சப்பரே வைரஸ் மனிதர்களுக்கு பரவக்கூடியது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த வைரஸ் பரவ தொடங்கினால், எபோலா, கொரோனா உள்ளிட்ட வைரஸ்களை விட கொடியதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த வைரசால் மனிதர்களுக்கு ரத்தக்கசிவு காய்ச்சல் ஏற்படும் என தெரிவித்த CDC ஆராய்ச்சியாளர்கள், இதற்கான அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி, மூட்டு மற்றும் தசை வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி, ஈறுகளில் இரத்தப்போக்கு, தடுப்புகள் மற்றும் எரிச்சல் ஆகியவை ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் இதற்கான மருந்து இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் தகவலாக இருந்தாலும், வருமுன் காப்பதே சிறந்தது என்பதற்கு ஏற்பார் போல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது நல்லதுதானே.
ஏனென்றால், உலக அளவில் மக்களை துன்புறுத்தி வரும் கொரோனவைரஸ், ஆரம்பகட்டத்தில் இந்த அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை நாம் அப்போது அறியவில்லை. தற்போது துன்பப்படுகிறோம். எது எப்படியோ உணவு முறை உட்பட மனிதன் தனக்குத் தேவையான அன்றாடத் தேவைகளை இயற்கையை அழிக்காமல், அதனோடு ஒட்டி வாழ பழகி, பூர்த்தி செய்து கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை.