கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர பூஜை காலம் வருகின்ற 17ஆம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு பக்தர்கள் அனைவரும் கார்த்திகை 1 ஆம் தேதி முதல் பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருப்பது வழக்கம். இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை புரிவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் வரும் வழியில் திருவிதாங்கூர் மற்றும் கொச்சி தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தங்கி இளைப்பாறி செல்ல ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இந்த இடங்கள் எடத்தவலம் என அழைக்கப்படுகின்றன.
இந்நிலையில் பக்தர்கள் அனைவரும் தங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று சபரிமலை ஐயப்பன் கோவில் சிறப்பு ஆணையருக்கு கேரளா உச்ச நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். இதனையடுத்து உயர்நிதிமன்றம் தானாக முன்வந்து இந்த விவாகரத்தை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த விசாரணையில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் வழியில் இருக்கும் எடத்தவலங்களில் தங்கும் ஏற்பாடுகளை திருவிங்தாங்கூர் மற்றும் கொச்சி தேவசம்போர்டு உறுதி செய்ய வேண்டும் என்று கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.