பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த சாரைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் ஒன்பது அடி நீளமுள்ள சாரை பாம்பு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரிந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய அலுவலரான சந்தானம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சாரைப்பாம்பை பிடித்துள்ளனர். அதன்பின் பிடிபட்ட பாம்பை அடர்ந்த வனப்பகுதிக்குள் தீயணைப்பு வீரர்கள் கொண்டு விட்டுள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.