Categories
உலக செய்திகள்

இந்தியர்களுடன் வரும் சரக்கு கப்பலுக்கு தடை…. அமைச்சருக்கு கடிதம் எழுதிய சங்கம்…. திட்டவட்டமாக மறுத்த சீனா….!!

சீனா தங்களுடைய துறைமுகங்களில் இந்தியாவை சேர்ந்தவர்கள் பணியாற்றும் சரக்கு கப்பல்களை நுழைவதற்கு தடை விதித்துள்ளதாக எழுந்த தகவல் உண்மையானது அல்ல என்று சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அனைத்திந்திய கப்பல் பணியாளர்கள் சங்கம் மத்திய துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, இந்தியாவை சேர்ந்த நபர்கள் பணிபுரியும் சரக்கு கப்பல்களை தங்கள் நாட்டிலுள்ள துறைமுகங்களில் நுழைவதற்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனால் சுமார் 20,000 இந்திய கப்பல் பணியாளர்கள் தங்களுடைய வேலையை இழந்ததால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சீனா இவ்வாறு தொடர்ந்து செய்து வருமேயானால் இது கடல் போக்குவரத்து துறையை மிகவும் கடுமையாக பாதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்நிலையில் தற்போது சீன நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் பெய்ஜிங்கில் பேட்டி அளித்தபோது, மேலே குறிப்பிட்டவாறு எழுந்துள்ள தகவல் உண்மையானது அல்ல என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுமே இதுபோன்ற தடை உத்தரவு எதுவுமே பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது என்றுள்ளார்.

Categories

Tech |