கட்டுப்பாட்டை இழந்த மினி சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை பகுதியில் மினி சரக்கு லாரி ஒன்று காய்கறிகளை ஏற்றி சென்றுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் லாரி டிரைவர் பெருமாள் லேசான காயங்களுடன் உயிர் தப்பி விட்டார். ஆனால் லாரியில் ஏற்றிச் சென்ற காய்கறிகள் அனைத்தும் கீழே விழுந்து வீணாகியது.
இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சாலையில் கவிழ்ந்த சரக்கு வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.