சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலிருந்து திருப்பூருக்கு உணவுப் பொருள்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று அவினாசி சாலையில் வந்து கொண்டிருந்தது. இந்த வாகனத்தை சென்னையில் வசிக்கும் தேவராஜ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் திருமுருகன்பூண்டி அடுத்த அம்மாபாளையம் வளைவில் சரக்கு வாகனம் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று டிரைவரை பத்திரமாக மீட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவிழ்ந்த வாகனத்தை கிரெயின் மற்றும் பொக்லைன் எந்திரம் கொண்டு அப்புறப்படுத்தினர். அதில் ஒரு சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட உணவுப்பொருட்கள் மற்றொரு வாகனத்திற்கு மாற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த திருமுருகன்பூண்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.