சீனாவின் சரக்குக் கப்பலுடன் எண்ணெய் கப்பல் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் எட்டு மாலுமிகள் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் ஷாங்காய் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள மஞ்சள் கடலில் எண்ணெய் கப்பல் ஒன்று 3 ஆயிரம் டன் பெட்ரோலை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது. அந்த கப்பல் யாங்ட்சி நதி முகத்துவாரம் அருகே சென்று கொண்டிருந்த போது, மாலன் மற்றும் ஜல்லிகளை ஏற்றி வந்த சரக்குக் கப்பலுடன் பயங்கரமாக மோதியுள்ளது. அப்போது கப்பலில் இருந்த என்னை திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. அந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த மீட்பு பணியில் 15 கப்பல்கள் மற்றும் இரண்டு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் அந்த விபத்தில் 14 மாலுமிகள் மாயமான நிலையில் 3 மாணவிகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் நேற்று காலை எண்ணை கப்பலில் தீ முழுவதுமாக அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மீட்புக்குழுவினர் மாயமான மாலுமிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
ஆனால் என்னை கப்பலில் இருந்து 8 மாலுமிகளின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஆறு மாலுமிகள் மாயமாகிய நிலையில், அவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. தொடர்ந்து மீட்பு பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. விபத்துக்கான காரணம் பற்றி அறிய விசாரணையை தொடர்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.