ஜெர்மனியில் சரக்குப் போக்குவரத்தை மேற்கொள்வதற்கு புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஜெர்மனியில் சீக்கிரமாக வாகனங்கள் செல்ல முடியாத இடங்களுக்கு சரக்குப் போக்குவரத்தை மேற்கொள்வதற்காக புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அந்தத் திட்டம் ட்ரோன்கள் மூலம் பொருட்களை எடுத்துச் செல்லும் முறையாகும். இந்த ட்ரோன் சரக்கு போக்குவரத்தை volocopter என்ற நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கு முன்பாக சில நாடுகளில் சிறு சிறு பொருட்களை ட்ரோன்கள் மூலம் எடுத்து செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஜெர்மனியில் சரக்குப் போக்குவரத்தில் ஈடுபட உள்ள ட்ரோன்கள், 200 கிலோ கிராம் எடையுள்ள பொருட்களைக் கூட தூக்கிச் செல்லக் கூடியவை ஆகும்.
எனவே எங்கெல்லாம் மற்ற வாகனங்களில் பொருட்களை கொண்டு செல்ல முடியாதோ, அங்கு இந்த ட்ரோன்கள் மூலம் பொருட்களை டெலிவரி செய்யலாம். மேலும் எந்த விதமான பொருட்களையும் ட்ரோன்கள் சுமந்து செல்லக்கூடியதாகும். இந்நிலையில் Hamburg நகரில் இந்த ட்ரோனின் சோதனை ஓட்டம் நிகழ்த்தப்பட்டது. அந்த சோதனை ஓட்டமானது 3 நிமிடங்களுக்கு நீடித்தது. இதனைத்தொடர்ந்து பெர்லின் முதலான ஜெர்மன் நகரங்கள் எதிர்காலத்தில் ட்ரோன்களை வழக்கமான போக்குவரத்தில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் ட்ரோன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் அது விரைவில் எதிர்கால சரக்கு போக்குவரத்தின் முக்கிய அம்சமாக மாறி விடலாம் என்று தோன்றுகிறது.