நடுரோட்டில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து தேவர்சோலை நோக்கி சரக்கு வாகனம் ஒன்று பாடந்தொரை வழியாக சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென அரசு பள்ளி அருகில் வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் நடுரோட்டில் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் ஊட்டியில் இருந்து பல காய்கறி, பழகழிவுகளை ஏற்றி கொண்டு குந்தலாடிக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இதில் சரக்கு வாகனத்தில் வந்தவர்கள் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர். இதனையடுத்து காவல்துறையினர் அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் கவிழ்ந்த சரக்கு வாகனத்தை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.