சரக்கு வாகனம் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி சிவன் கோவில் நந்தவனம் தெருவில் மீனா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் தனது உறவினரான பராசக்தி காலனியைச் சேர்ந்த ஈஸ்வரியும் இருசக்கர வாகனத்தில் பழைய விருதுநகர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வாகனத்தை மீனா ஓட்டி வந்தார். இதனையடுத்து பின்தொடர்ந்து வந்த சக்திவேல் என்பவர் ஓட்டி வந்த சரக்கு வாகனம் இருசக்கர வாகனத்தில் மோதியது.
இதில் ஈஸ்வரி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஈஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சிவகாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.