டெல்லியில் சரக்கு வாகனம் தடம்புரண்டு கார் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் சரக்கு வாகனம் ஒன்று கனம் தாங்காமல் தடம்புரண்டு அங்கிருந்த கார் ஒன்றின் மீது கவிழ்ந்தது. இதனால் காரில் இருந்த 3 பேர் பலத்த காயமடைந்தனர். அதில் இருவரின் நிலைமை மோசமாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனிடையில் காருக்குள் சிக்கிய 8 வயது சிறுமியை தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மேலும் சிறுமியின் பெற்றோருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.