சரக்கு வாகனங்களில் மாணவர்களை ஏற்றி செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பாக மினி வேன் கவிழ்ந்து 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்ல கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பின் இம்மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்று வருகின்ற இலக்கிய, புத்தக கண்காட்சிக்கு அரசு பள்ளி மாணவ-மாணவிகளை சரக்கு வண்டியில் அழைத்து சென்றுள்ளனர்.
பின்னர் இதே போன்று சரக்கு வாகனங்களில் மாணவர்களை ஏற்றிச் சென்று விபத்து ஏற்படுவதற்கு முன்பு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.