சரள் மண் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குறிச்சிகுளம் பகுதியில் தாழையூத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் லாரியில் முறையான அனுமதியின்றி 3 யூனிட் மண் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் டிரைவர் சீவலப்பேரி பகுதியில் வசிக்கும் இசக்கிமுத்து என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இசக்கிமுத்துவை கைது செய்ததோடு மண் கடத்தி வந்த லாரியையும் பறிமுதல் செய்தனர்.