உக்ரைன் வீரர்கள் எங்களிடம் சரணடையாவிட்டால் கொல்லப்படுவார்கள் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் சமீபத்தில் ரஷ்யாவின் போர்க்கப்பலை அழித்த நிலையில் தனது தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ரஷ்ய படைகள் உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள எஃகு ஆலையில் கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றனர். ‘சரணடைய மாட்டோம் இறுதிவரை போராடுவோம்’ என்ற கொள்கையின்படி ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போராடி வருகிறது.
இதற்கிடையில் உக்ரைனின் பிற பகுதிகளில் ஏவுகணை, ராக்கெட் போன்ற ஆயுதங்களை வைத்து சின்னாபின்னமாகி வரும் நிலையில் தங்களது பிடியில் சிக்கியுள்ள மரியுபோல் நகரை ரஷியப் படைகள் கொடூரமாக தாக்குதல் நடத்தி வருவதாக அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சட்டியுள்ளார். இதனை தொடர்ந்து மரியுபோலை முழுமையாக கைப்பற்றி உள்ள ரஷ்ய படைகள் அங்கு உள்ள இரும்பு ஆலை ஒன்றில் 2,500க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் உள்ளதாக தகவல் வெளியாகின. இதற்கிடையில் அவர்களை ரஷ்ய படையினர் ஆயுதங்களை கைவிட்டு விட்டு உடனடியாக எங்களிடம் சரணடையங்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் செய்தி தொடர்பாளர் இகோர் கொனஷென்கோ கூறியதாவது “எங்களிடம் உக்ரைன் வீரர்கள் சரணடைவதற்கு அந்நாட்டு ராணுவம் தலைமை தடை விதித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் உக்ரைன் வீரர்களுடன் இணைந்து வெளிநாடுகளைச் சேர்ந்த 4௦௦ கூலிப்படையினர் சுற்றிவளைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் எங்களிடம் சரணடையாவிட்டால் கொள்ளப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்