தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 30 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
தேனீ மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள சோத்துப்பாறை அணையின் மூலம் பெரியகுளம் மேல்மங்கலம் லட்சுமிபுரம் தாமரைகுளம் பகுதியில் மொத்தம் 2,865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சுமார் 126.28 அடி கொண்ட அணை முழு கொள்ளளவை எட்டி தற்போது நீர்மட்டம் 126 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 500 கனஅடியாக உள்ளது.
இந்நிலையில் முதல் போக சாகுபடிக்காக அணையில் இருந்து வினாடிக்கு 30 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையை இன்று திறந்து வைத்தனர். இன்று முதல் 62 நாள்களுக்கு வினாடிக்கு 30 கனஅடி நீரும், 62 நாள்களுக்கு 27 கன அடி நீரும், கடைசி 59 நாட்களுக்கு 25 கன அடி நீர் விதம் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.