Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. பிரபல நடிகருக்கு வில்லனாகும் சரத்குமார்….. எந்த படத்தில் தெரியுமா…..?

‘ருத்ரன்’ படத்தில் சரத்குமார் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இயக்குனர் கதிரேசன் இயக்கத்தில் தற்போது இவர் நடிக்கும் திரைப்படம் ”ருத்ரன்”. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். கே.பி திருமாறன் கதை, திரைக்கதை எழுதும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

ருத்ரன்' திரைப்படத்துக்காக மீண்டும் இணையும் சரத்குமார் - லாரன்ஸ் | sarathkumar and lawrence joins again for rudhran - hindutamil.in

மேலும் ,ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தில் பிரபல நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த படத்தில் இவர் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ராகவா லாரன்ஸ் மற்றும் சரத்குமார் நடிப்பில் வெளியான காஞ்சனா திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |