இயக்குனர் பாலுச்சாமி இயக்கத்தில் சரத்குமார் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சரத்குமார். இயக்குனர் பாலுச்சாமி இயக்கத்தில் இவர் புதிதாக பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பற்றி இயக்குனர் கூறும்போது,” இந்த காலத்திற்கு தேவையான கதையம்சம் கொண்ட படமாக இது இருக்கும் எனவும், சரத்குமார் இந்த கதையை கேட்டதும் உடனே நடிக்க சம்மதித்தார்” எனவும் கூறினார்.
மேலும், இந்த படத்தில் சுஹாசினி மணிரத்னமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனையடுத்து, நந்தா, சிங்கம்புலி, கஞ்சா கருப்பு மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் திரைப் படமாக இருக்கும் என இந்த படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.