காவல்துறையினர் 400 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்துவிட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஓதவந்தான்குடி கிராமத்தில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கலியபெருமாள் அவரது வீட்டில் சாராய ஊறல் போட்டு விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின்படி புதுப்பட்டினம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் வீட்டில் இருந்த 400 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து தரையில் ஊற்றி அழித்துவிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கலியபெருமாளை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.