சட்ட விரோதமாக சாராய ஊறல்களை பதுக்கி வைத்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காவல்துறையினர் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது மல்லிகைபாடி அருகில் இருக்கும் கோமக்காடு ஓடையில் 6 பேரல்களில் 1,200 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டு பிடித்த காவல்துறையினர் அதை தரையில் ஊற்றி அழித்துள்ளனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட அதே பகுதியில் வசிக்கும் ராஜேஷ் என்பவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.