சட்ட விரோதமாக சாராய விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பட்டி அருகாமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது சாராயம் விற்பனை செய்தவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியில் வசிக்கும் குப்பன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து குப்பனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.