சட்ட விரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சேஷசமுத்திரம் ஏரிக்கரை அருகில் சாராய விற்பனை செய்த ராமர் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதனை அடுத்து இதே போல் கொசப்பாடி கிராமத்தில் வீட்டின் அருகாமையில் சாராயம் விற்பனை செய்த ராஜேந்திரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வாய்கால்மேடு பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது லட்சுமி என்பவர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்திருக்கிறார். மேலும் இதைப் பார்த்த காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்து 60 லிட்டர் சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.