கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதி அருகே குக்கரில் சாராயம் காய்ச்சிய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு அமலில் உள்ளதால் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேலாக மதுக்கடைகளை மூடியுள்ளனர். இதனால் மது பிரியர்கள் எங்கேயும் சட்டவிரோதமாக சாராயம் கிடைக்கிறதா என்று தெரிந்த வண்ணம் இருக்கின்றனர். இவர்களது இந்த ஆசையை பயன்படுத்தி பலர் இக்காலகட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டவும் நினைத்து விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
அவர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மதுவிலக்கு பிரிவினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியையடுத்த பெரியான் குப்பத்தில் சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலையடுத்து,
அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கே வீட்டு தோட்டம் ஒன்றில் பெருமாள், செல்வம் ஆகியோர் குக்கரில் சாராயம் காய்ச்சி கொண்டிருந்ததாகவும், அவர்களிடமிருந்து பதப்படுத்தப்பட்ட சாராய ஊறல் மற்றும் 3 லிட்டர் சாராயம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்ததுடன் அவர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.