சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விரியூர் கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் விரியூர் கிராமத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருக்கும் வயல்வெளிப் பகுதியில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த ஒருவர் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஓடி விட்டார்.
இதனையடுத்து அவர் சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த 250 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்துள்ளனர். பின்னர் இது தொடர்பாக காவல்துறையினர் விரியூர் கிராமத்தில் வசிக்கும் சவரிராஜ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.