சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள ஆத்திரிக்குப்பம் பகுதியில் இருக்கும் முந்திரி தோப்பில் காவல்துறையினர் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவா, பாலமுருகன் மற்றும் சந்திரகாந்த் ஆகிய 3 பேரும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்த 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர்.