சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சுவதற்காக ஊறலை பதுக்கி வைத்திருந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருக்கும் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக 6 பேரல்களில் 2000 லிட்டர் சாராய ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து அந்த சாராய ஊழலை காவல்துறையினர் கீழே கொட்டி அழித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகன், மணிவிளக்கு மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.