வேட்பாளர் ஒருவர் சாராயத்தை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லும் போது காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி நகர் பகுதியின் அருகாமையில் இருக்கும் லாலா ஏரியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வளையாம்பட்டு வார்டு எண் 9-ல் போட்டியிட்டு வருகிறார்.
இந்நிலையில் சாராயத்தை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லும் போது கிருஷ்ணனை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட கிருஷ்ணனின் மீது பல சாராய வழக்குகள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.