சாராயம் விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரகண்டநல்லூர் காவல்துறையினர் கோட்டை மருதூர் கிராமத்தில் இருக்கும் கொடுக்கப்பட்டு ஏரிக்கரையில் சாராய சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த கோட்ட மருதூர் கிராமத்தில் வசிக்கும் குமாரசாமி மற்றும் அவரின் மகன் சந்திரசேகர் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனை அடுத்து அவர்களிடம் இருந்த 60 லிட்டர் சாராயம் மற்றும் 400 லிட்டர் சாராய ஊறல்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து அதை கிழே கொட்டி அழித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.