Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சாராயம் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஓடைக்கரை பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக மணல்மேடு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஓடைக்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில்அவர் அதே பகுதியில் வசிக்கும் ஸ்டீபன் ராஜ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஸ்டீபன் ராஜை கைது செய்ததோடு அவர் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |