சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாண்டியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ஓடை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள ஒரு மலையடிவார முட்புதரில் 2 நபர்கள் பதுங்கி இருந்தனர். பின்னர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் இருவரும் சாராய விற்பனை செய்ததாக காவல்துறையினரிடம் கூறியுள்ளனர்.
அதன்பின் அவர்களிடம் இருந்த சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து கைதான இருவரும் ஒழுகூர் ஊராட்சி பல்லமுட்டைவாடி கிராமத்தில் வசிக்கும் வினோத் மற்றும் விஜய் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.