சட்ட விரோதமாக சாராய விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செங்கோடன், ஆறுமுகம் மற்றும் திருப்பதி ஆகிய 3 பேரும் சாராய விற்பனை செய்துள்ளனர்.
இதைப் பார்த்த காவல்துறையின் அவர்கள் 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.