சாராய விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கனேரி மலை கிராமத்தில் சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது நாயக்கனேரி மலை கிராமத்தில் சோளக்கொல்லை மேடு பகுதியில் ராமலிங்கம் என்பவர் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 40 சாராய பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.