சாராய விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேசமுத்திரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரை அருகாமையில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனை அறிந்த காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று சாராய விற்பனையில் ஈடுபட்ட கமல் என்பவரை கைது செய்துள்ளனர். பின்னர் கமலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 100 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.