Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சொன்னோம் கேட்கல…. திரும்பவும் குற்ற செயல்கள்…. கோட்டாட்சியர் உத்தரவு….!!

சாராய விற்பனையில் ஈடுபட்டதினால் வியாபாரிக்கு ஓராண்டு சிறை தண்டனை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தொடர்ந்து மூன்று பகுதிகளில் சாராயம் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் மலைக்கோட்டாலம் பகுதியில் சாராயம் விற்பனை செய்த வழக்கில் கைதாகி இருக்கின்ற தனபால் மற்றும் ஜெயமணி ஆகியோர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சாராய விற்பனையின் உரிமையாளரான ராஜா என்பவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து ராஜா மீது காவல்நிலையத்தில் மதுவிலக்கு குற்றவாளிகள் சரித்திர பதிவேடு பதியப்பட்டு நன்னடத்தை இணையம் அமலில் இருந்து வரும் நிலையில் அவர் மீண்டும் சாராய தொழிலில் ஈடுபட்டு வந்ததால் தலைமறைவாக இருந்த ராஜாவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதனை தொடந்து ராஜா தான் எழுத்துப்பூர்வமாக கொடுத்துள்ள ஒரு ஆண்டு காலத்திற்கான பிணையத்தை பின்பற்றாமல் தொடர்ந்து மது விலக்கு குற்றச்செயல்களில் ஈடுபட்டதினால் மீதமிருக்கும் 349 நாட்கள் தொடர்ந்து சிறையில் அடைக்குமாறு கோட்டாட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். மேலும் செஞ்சி கிளை சிறைச்சாலையில் இருந்த ராஜாவை கடலூர் மத்திய சிறைச்சாலையில் காவல்துறையினர் அடைத்துள்ளனர்.

Categories

Tech |