வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தியாகராஜபுரத்தில் வீட்டின் அருகில் சாராயம் விற்பனை செய்த அதே ஊரில் வசிக்கும் மொட்டையம்மாள் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்பின் அவரிடம் இருந்த 30 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.