சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அண்டம்பள்ளம் கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் வசிக்கும் வீரபாண்டி மற்றும் சுரேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சாராயம் மற்றும் ஊறல்களை பறிமுதல் செய்து கிழே கொட்டி அழித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.