35 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசம்பட்டு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விரியூர் காட்டுக்கொட்டாய் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த ஞானபிரசாத் மற்றும் சேஷசமுத்திரம் கிராமத்தில் தனது வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த செந்தில் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பின்னர் அவர்களிடம் இருந்து தலா 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இதே போல் அரசம்பட்டு முருகன் கோவில் அருகாமையில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த ராமர் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர்.