திமுக வெற்றி பெற்றுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு வளர்ச்சி நிதி குறைத்து வழங்கப்படும் என்று கே.சி.கருப்பன் என்று கூறியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் பேசிய அவர் இதனை கூறினார். சத்யமங்கலத்தின் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை திமுக கைப்பற்றி இருந்தாலும் இங்கு எந்த வளர்ச்சி பணியும் நடக்காது என்று அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார்.
திமுக வெற்றி பெற்ற இடங்களில் குறைவாகவே நிதி ஒதுக்கப்படும் என்று பகிரங்கமாக அறிவித்தார். ஏதாவது பிரச்சனை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டால் கூட, போலீசார் அதிமுகவினர் கூறுவதைத் தான் கேட்பார்கள் என்றும் கூறிய அமைச்சர் கருப்பணன் அதிரவைத்தார். நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படும் என்றும் வளர்ச்சிக்கு தடைபோட படும் என்ற தோணியில் ஒரு அமைச்சரை பொதுவெளியில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.