நடிகை ஜோதிகாவின் நடிப்பில் உருவான பொன்மகள் வந்தாள் படம், ஊரடங்கு முடிந்த பின்னரே வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது. ஆனால் இப்படத்திற்கான தேதி இன்னும் உறுதியாக வில்லை. தற்போது அவர் மருத்துவமனைகளை கோவில் போல் பராமரிக்க வேண்டுமென்று, தஞ்சை அரசு மருத்துவமனையை பற்றி தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையாகி விமர்ச்சிக்கப்பட்டன.
''அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்''#பாரதியார் இந்த #பாரதி_கண்ட_புதுமைப்பெண் #பொன்மகள்_வந்தாள் #Jyothika #ISupportJothika @Suriya_offl pic.twitter.com/UiNh7PEVnY
— முனைவர்.கு.உமாதேவி M.A., M.Phil., Ph.D., (@UmadeviOfficial) April 25, 2020
இது குறித்து சமூக வலைத்தளங்களிள் எதிர்ப்புகளும், பல்வேறு கருத்துக்களும் எழுந்தது. இந்த நிலையில் அவருக்கு தொடர்ந்து ஆதரவுகளும் குவிந்த வண்ணம் இருக்கிறது. மேலும் பாடலாசிரியர் அருண் பாரதி, உமா தேவி என அவர்களுடைய ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கு வழக்கம் போல் சூர்யா, ஜோதிகா ரசிகர்களிடையே ஆதரவு பெருகி டேக் செய்து வருகிறார்கள்.
https://twitter.com/ArunbharathiA/status/1253365232631570433