Categories
இந்திய சினிமா சினிமா

சர்ச்சையில் சிக்கிய “பதான்” …. ஒரு நடிகை படத்தில் காவி உடை அணிந்து வருவது குத்தமா?…. பிரகாஷ் ராஜ் கேள்வி…..!!!!

சித்தார்த் ஆனந்த் டைரக்டு செய்த “பதான்” இந்தி திரைப்படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்து இருக்கின்றனர். இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பான் இந்தியா படமாக அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இப்படத்தில் நடிக்க தீபிகா படுகோனே ரூபாய்.15 கோடி சம்பளம் பெற்று உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சில நாட்களுக்கு முன் பதான் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தீபிகா படுகோனேவின் கவர்ச்சி குத்தாட்ட பாடல் காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த பாடலில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி உடையில் கவர்ச்சி நடனமாடி இந்துக்கள் மனதை புண்படுத்தி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து வீர சிவாஜி அமைப்பை சேர்ந்தவர்கள் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் பதான் படத்தை தடைசெய்யுமாறு கோஷமிட்டு தீபிகா படுகோனே, ஷாருக்கான் போன்றோரின் கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் “பதான்” படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது பற்றி தனது சமூகவலைதளத்தில் “காவி உடை அணிந்து பெண்களை பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்குகின்றனர். அத்துடன் சில எம்எல்ஏக்கள் வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். காவி உடையணிந்த சாமியார்கள் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். அதெல்லாம் பரவாயில்லை, ஆனால் ஒரு நடிகை படத்தில் காவி உடை அணிந்து வருவது தவறா?.. என அவர்  காட்டமாக பதிவிட்டு உள்ளார்.

Categories

Tech |