மஞ்சள் சேலை, வளையல், தாலி கயிறு, குங்குமம், பணம் போன்றவற்றை திருமணமான பெண்களுக்கு அவரது சகோதரர்கள் வாங்கி கொடுக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆண்கள் தனது சகோதரிகளுக்கு வளையல், குங்குமம், மஞ்சள் சேலை, தாலிக்கயிறு, பணம் போன்றவையும், திருமணமாகாத இளம் பெண்களுக்கு தாலி கயிற்றினை தவிர மற்ற பொருட்களையும் வழங்கி வருகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் சகோதர உறவுகள் மேம்படும் எனவும், இருவருக்கும் ஆயுள் காலம் நீடிக்கும் எனவும் பொதுமக்கள் நம்புவதால் கயத்தாறு பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் மஞ்சள் சேலைகளின் விற்பனையானது அமோகமாக நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, சகோதரர்கள் தங்களது சகோதரிகளுக்கு மஞ்சள் சேலை வாங்கி கொடுப்பதன் மூலம் இருவரின் உறவுகள் மேம்படும் என நம்புவதாக தெரிவித்துள்ளனர். மேலும் இவ்வாறு திருமணமான பெண்களுக்கு அவர்களது சகோதரர் மஞ்சள் சேலை, குங்குமம், தாலிக்கயிறு போன்றவற்றையும், திருமணமாகாத இளம் பெண்களுக்கு தாலிக்கயிற்றை தவிர்த்து மற்ற பொருட்களை வாங்கி கொடுப்பதன் மூலமும் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்ந்து உள்ளன என தெரிவித்துள்ளனர்.