தெலுங்கின் முன்னிணி நடிகராக வலம் வருபவர் மகேஷ்பாபு. இவர் நடிப்பில் ‘சரிலேரு நீக்கெவரு’ என்ற அதிரடி ஆக்ஷன் திரைப்படம் உருவாகி வருகிறது. 2020 ஜனவரியில் வெளியாகும் இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பாரா மிலிட்டரி அதிகாரியாக மகேஷ் பாபு மிரட்டும் இந்தப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி, கீதா கோவிந்தம் படப்புகழ் ராஷ்மிகா, ஆதி, பிரகாஷ் ராஜ், சச்சின் கெடேகர், பிரதீப் ராவத் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளாதால் தெலுங்கு திரையுலகில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு முக்கிய காட்சிகள் சில படமாக்கப்பட்டன. 2020 ஜனவரியில் மகர சங்கராந்தியை முன்னிட்டு இந்த திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதற்கான இறுதிகட்ட பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. தெலுங்கில் முன்னணி இயக்குநர்களின் ஒருவரான அனில் ரவிபுடி இயக்கும் இந்தப் படத்தை ஏ.கே. எண்டர்டெயின்மெண்ட் மற்றும் மகேஷ் பாபு எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ராக் ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கும், லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தியின் கதாபாத்திரத்திற்கான போஸ்டரை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.
பாரதி என்ற கதாபாத்திரத்தில் விஜயசாந்தி நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் மற்றொரு போஸ்டர் இன்று மாலை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருக்கிறது.
https://youtu.be/PX0-q3Cnb28