பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் கடந்த திங்கட்கிழமை திடீரென்று முடக்கப்பட்டதால் முகநூல் நிறுவனம் பங்குச்சந்தையில் 4.9 சதவீதம் அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது.
உலக அளவில் மக்கள் வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இந்தியா உள்பட பல நாடுகளில் திடீரென்று சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டன. குறிப்பாக முகநூல் மற்றும் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், போன்ற சமூக ஊடகங்களும் முடக்கப்பட்டது. இதனால் உலக மக்கள் அனைவரும் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இது தடங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 6 மணி நேரம் முடக்கத்திற்கு பின்னர் அனைத்து சமூக ஊடகங்களான பேஸ்புக், முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்றவை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டது. அதிலும் பேஸ்புக் நிறுவனத்தின் 6 மணி நேர முடக்கத்திற்கு அதன் உரிமையாளரான மார்க் சூகர்பெர்க் தனது சொத்து மதிப்பில் இருந்து 6 மில்லியன் டாலரை இழந்துள்ளார்.
அதாவது இந்திய மதிப்பில் சுமார் 44 ஆயிரம் கோடியை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உலக கோடீஸ்வரர் பட்டியலில் பில்கேட்ஷுக்கு அடுத்த இடத்தில் இருந்த இவர் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். குறிப்பாக கடந்த திங்கட்கிழமை மட்டும் பங்குச்சந்தையில் 4.9 சதவீதம் அளவிற்கு முகநூல் நிறுவனம் சரிவை சந்தித்துள்ளது. மேலும் செப்டம்பர் மாதத்தில் பாதிக்குமேல் முகநூல் நிறுவனம் தனது பங்கில் 15% வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனைதொடர்ந்து மார்க் சூகர்பெர்க் சொத்து மதிப்பானது 140 மில்லியன் டாலரில் இருந்து 12 1.6 டாலராக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.