Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சரியான மயானம் வசதி இல்லை…. கொடுத்து உதவிய விவசாயி…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!

மயானத்திற்கு நிலப்பகுதியை விவசாயி ஒருவர் கொடுத்து உதவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள மாக்கினாங்ககோம்பை ஊராட்சியில் தட்டாம்புதூர் கிராமம் இருக்கின்றது. அங்கு இருக்கக்கூடிய காலனியில் வசித்து வரும் பொதுமக்கள், உயிரிழந்தவர்களின் சடலத்தை தனியாருக்கு சொந்தமான நிலத்தில் புதைத்து  தவித்து வந்தனர். எனவே பொது மயான வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. பழனி தேவி, சத்தியமங்கலம் தாசில்தார் ரவிசங்கர், ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் கே.சி.பி. இளங்கோ மற்றும் அரசு அதிகாரிகள் போன்றோர் தட்டாம்புதூருக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

அப்போது பொதுமக்கள் ஏற்கனவே பயன்படுத்தி வந்த மயான நிலத்திற்கு உரிமையாளரான அரசூரை சேர்ந்த சீனிவாசன் என்பவரை அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இதனையடுத்து மயானத்திற்கு தேவையான 9 சென்ட் நிலம், வழிப்பாதைக்கு 2 சென்ட் நிலம் என 11 சென்ட் நிலத்தை மயானத்திற்கு கொடுக்க விவசாயி சீனிவாசன் முடிவு செய்தார். இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |