Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சரியான நேரத்தில் வரவில்லை…. பொதுமக்கள் சாலை மறியல்…. திருச்சியில் பரபரப்பு….!!

பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆனைப்பட்டி கிராமத்தில் அரசு பேருந்துகள் சரியான நேரத்தில் வருவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதில் குறிப்பாக முசிறியில் இருந்து புலிவலம் மார்க்கமாக செல்லும் பேருந்து சரியான நேரத்தில் வராதால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்தப் பேருந்து சரியான நேரத்தில் வராத காரணத்தினால் கோபமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் ஆனைப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனை முசிறி கிளை மேலாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது பேருந்துகள் சரியான நேரத்தில் விட நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |